Friday, 24 June 2011


நம் நாட்டில் சில விஷயங்கள் உள்ளன.அவற்றி பற்றி கேள்வி கேட்டாலே அவன் துரோகி, பழமைவாதி,மதவெறியன்[ ஹிந்து  மட்டும்] என்று பட்டம் சூட்டப்படுகிறது. மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலன் , சோசியலிசம்,இடதுசாரி சிந்தனை போன்றவற்றின் பெயரால் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம், கேட்பாரே கிடையாது. மீறி கேட்டால் உடனே குத்தப்படும் முத்திரை, இவன் ஒரு ஹிந்துத்வா ஆதரவாளன். ஆகவே இவன் ஒரு காவி பயங்கரவாதி [.உபயம்- நமது சிவகங்கை சின்னப்பையன்.] பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினரைக்கண்டு அஞ்சும் அவலம் உலகில் நம் நாட்டில் மட்டுமே உண்டு....

Wednesday, 22 June 2011

today's thoughts

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன்.
                                                           பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 
 கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நான்  நம்புவதில்லை. அதிலும் நாத்திக பிரச்சாரம் செய்யும்  அறிவிலிகளை நான் வெறுக்கிறேன். இறை அனுபவம்  என்பது தனிப்பட்ட விஷயம். உன் சொந்த அனுபவத்தால் நீ நாத்திகன் ஆனால் அது உன்வரையில் சரி. என்னைப்பற்றியோ என் நம்பிக்கை பற்றியோ விமர்சிக்க உனக்கு என்ன உரிமை ?இறை அனுபவம் பற்றிய தேடல் இல்லாமல்  எவனோ சொன்னான் , என்பதற்காக நாத்திகத்தின் பின்னால் ஓடும் போலி பகுத்தறிவு வாதிகளை கண்டால் எனக்கு ஆட்டு மந்தை தான் நினைவுக்கு வருகிறது. இதில் எத்தனை பேர் உணர்ந்து தெளிந்தவர்கள்?அடுத்தவனுக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு  தன சொந்த காரியம் என்று வரும்போது ரகசியமாக கோயிலுக்கு ஓடும் போலி நாத்திகர்களை  ஆதர்சமாக  கொள்ளும் இவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன்.....

oru hinduvin sindhanaigal.

நான் நினைப்பதை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. blogger -க்கு நன்றி.ஒரு ஹிந்துவாக  நான் என்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிக்கிறேன். என்னை பாதிக்கும் விஷயங்களை பதிவு செய்ய விழைகிறேன்.மாற்றுக்கருத்துக்களை வரவேற்கிறேன்.