அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நான் நம்புவதில்லை. அதிலும் நாத்திக பிரச்சாரம் செய்யும் அறிவிலிகளை நான் வெறுக்கிறேன். இறை அனுபவம் என்பது தனிப்பட்ட விஷயம். உன் சொந்த அனுபவத்தால் நீ நாத்திகன் ஆனால் அது உன்வரையில் சரி. என்னைப்பற்றியோ என் நம்பிக்கை பற்றியோ விமர்சிக்க உனக்கு என்ன உரிமை ?இறை அனுபவம் பற்றிய தேடல் இல்லாமல் எவனோ சொன்னான் , என்பதற்காக நாத்திகத்தின் பின்னால் ஓடும் போலி பகுத்தறிவு வாதிகளை கண்டால் எனக்கு ஆட்டு மந்தை தான் நினைவுக்கு வருகிறது. இதில் எத்தனை பேர் உணர்ந்து தெளிந்தவர்கள்?அடுத்தவனுக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு தன சொந்த காரியம் என்று வரும்போது ரகசியமாக கோயிலுக்கு ஓடும் போலி நாத்திகர்களை ஆதர்சமாக கொள்ளும் இவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன்.....

No comments:
Post a Comment